Paristamil Navigation Paristamil advert login

ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தியின் வெண்கல சிலைதிருட்டு!

 ஆஸ்திரேலியாவில்  மகாத்மா காந்தியின் வெண்கல சிலைதிருட்டு!

4 மாசி 2026 புதன் 15:44 | பார்வைகள் : 2214


ஆஸ்திரேலியாவின் மெல்போனில் மகாத்மா காந்தியின் (Gandhi Statue) வெண்கல சிலையை மர்ம நபர்கள் இரவோடு இரவாக தூக்கி சென்ற சம்பவம் மெல்போர்ன் வாழ் இந்திய சமூகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெல்போர்னில் உள்ள ரோவில்லில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய இந்திய சமூக மையத்தில் இருந்த மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை திருடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விக்டோரியா பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பவத்திற்கு உறுதியான எதிர்ப்பினையும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா இந்த விவகாரத்தை ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் முறையாக எடுத்துரைத்து, சிலையை மீட்கவும், இதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காணவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.