Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - 100க்கு மேற்பட்டோர் பலி!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - 100க்கு மேற்பட்டோர் பலி!

3 மாசி 2026 செவ்வாய் 16:42 | பார்வைகள் : 1895


அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் வீசும் கடும் பனிப்புயலால் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பல மாநிலங்களில் வீசிவரும் அதிகப்படியான பனிப்புயல் காரணமாக விபத்துக்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாகவும் பல இடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் கடுமையான குளர் நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வாகன விபத்துக்கள், பனிச்சரிவுகள், பனியை அள்ளி வீசுவதால் ஏற்படும் இதயம் தொடர்பான நோய்கள் முதலான காரணங்களால் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும், நியூயோர்க் நகர அதிகாரிகள் 14 பேர் குளிரில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களது இறப்புக்கான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய இந்த பனிப்புயல் காரணமாக வட, தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜோர்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

பனிக் குவியல்களால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.