Paristamil Navigation Paristamil advert login

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்..? - புதிய திடுக்கிடும் தகவல்கள்!

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தாரா ட்ரம்ப்..? -  புதிய திடுக்கிடும் தகவல்கள்!

3 மாசி 2026 செவ்வாய் 14:33 | பார்வைகள் : 721


35 ஆண்டுகளுக்கு முன் நியூஜெர்சியில் 13 வயது சிறுமியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபராக வலம் வந்த ஜெப்ரி எப்ஸ்டீன்  (Jeffrey Epstein), சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும் பெண்கள், சிறுமியரை விநியோகித்து, மறைமுகமாக வியாபாரத் தொடர்பு பேணிவந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு,  2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

பின், நியூயோர்க்கில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன், மர்மமான முறையில் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

அதனையடுத்து, எப்ஸ்டீன் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்பான வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, “எப்ஸ்டீன் கோப்புகள்” என்ற பெயரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

லட்சக்கணக்கான பக்கங்களை கொண்ட இந்த “எப்ஸ்டீன் கோப்புகளில்”  உலகளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் பல முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் டொனால்ட் ட்ரம்ப் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளமை சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.

அந்த ஆவணங்களில், ட்ரம்ப் 13 வயது சிறுமியை 35 ஆண்டுகளுக்கு முன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் அந்த சிறுமி, தன்னை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்தபோது ட்ரம்ப் அந்த சிறுமியை தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த சிறுமியை ஜெப்ரி எப்ஸ்டீனும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறித்த ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும், 1984இல் மிச்சிகனில் உள்ள மோனா ஏரியில் பிறந்த குழந்தையொன்று சிசுக்கொலை செய்யப்பட்டு, வீசப்பட்டதை ட்ரம்ப் அங்கிருந்து நேரில் பார்த்ததாகவும் எப்ஸ்டீன் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட அந்த குழந்தை ட்ரம்ப்புக்கோ அல்லது வேறு எவருக்கோ பாலியல் உறவினால் பிறந்த குழந்தையாக இருக்கக்கூடும் என்றும் எப்ஸ்டீன் ஆவணத்தில் சந்தேகக் குறிப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

எப்ஸ்டீன் ஆவணங்களில் தனது பெயர் வெளியானது குறித்து கருத்து தெரிவித்து வரும் ட்ரம்ப், தனக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான தொடர்புகள், ஆவணத்தில் தன்னை தொடர்புபடுத்தி குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் மறுத்து வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

வர்த்தக‌ விளம்பரங்கள்