Paristamil Navigation Paristamil advert login

காங்கோ நிலச்சரிவில் சிக்கி 200 சுரங்க தொழிலாளர்கள் பலி

 காங்கோ நிலச்சரிவில் சிக்கி 200 சுரங்க தொழிலாளர்கள் பலி

3 மாசி 2026 செவ்வாய் 10:07 | பார்வைகள் : 175


காங்கோ நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் ருபாயா என்ற பகுதியில் சுரங்க வேலையில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு இருந்தபோது 2 முறை நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

இதில் சிக்கி 200 பேர் பலியாகி இருக்க கூடும் என தகவல் தெரிவிக்கின்றது.

அந்த பகுதியை கிளர்ச்சி குழுவினர் கட்டுக்குள் கொண்டு வந்ததும் அரசு அதிகாரிகள் தப்பி வெளியேறி விட்டனர்.

இதனால், தொலைதொடர்பு வசதியும் துண்டிக்கப்பட்டு விட்டது.

இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவில் சிக்கியவர்களின் விவரங்கள் தெரிய வரவில்லை.

உண்மையான பலி எண்ணிக்கை விவரங்களை உறுதிப்படுத்த முடியாத சூழல் உள்ளது. மீட்பு பணியும் தடைபட்டு உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்