நாணயமாக கட்சி நடத்துகிறோம்; மாம்பழ சின்னம் எங்களுக்கு தான்: ராமதாஸ்
3 மாசி 2026 செவ்வாய் 10:43 | பார்வைகள் : 2024
நாங்கள் நாணயமாக கட்சியை நடத்துகிறோம். மாம்பழ சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் கடந்த 31ம் தேதியிலிருந்து நிறுவனர் ராமதாஸ் நேர்காணல் நடத்தி வருகிறார். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்துார், நீலகிரி,மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை என 13 மாவட்டங்களை சேர்ந்த 600 பேரிடம் இன்று நேர்காணல் நடந்தது.
பின்னர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: கூட்டணி என்றால் அது வெற்றி கூட்டணியாக தான் இருக்க வேண்டும். பா.ம.க.,வின் மாம்பழ சின்னம் யாருக்கு என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24ம் தேதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு பிரிவினர், பதர்கள் தங்களுக்குதான் மாம்பழ சின்னம் கிடைத்துவிட்டது என்று சொல்கின்றனர். நாங்கள் நாணயமாக கட்சியை நடத்துகிறோம். மாம்பழ சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan