தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் 1,315 கோடி கிலோ அரிய கனிமம்
3 மாசி 2026 செவ்வாய் 09:34 | பார்வைகள் : 2043
தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில், 'மோனசைட்' என்ற அரிய வகை கனிமம், 1,315 கோடி கிலோ அளவு கண்டறியப்பட்டுள்ளது என, மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.
பார்லிமென்டில், மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதில், தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் அரிய வகை கனிமங்கள் கண்டறிந்து, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் எனவும், இதற்காக, இந்த மாநிலங்களை இணைக்கும் வகையில், கனிம வள வழித்தடம் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை மணல்
இந்நிலையில், இத்திட்டம் பற்றி, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி, ராஜ்யசபாவில் நேற்று பேசியதாவது:
நம் நாட்டில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில் குறிப்பிடத்தக்க அரிய வகை கனிம வளங்களை அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் அணு கனிமங்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் கண்டறிந்துள்ளது.
குறிப்பாக, தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மஹாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் உள்ள கடற்கரை, செம்மண் மற்றும் வண்டல் மண்ணில் 'மோனசைட்' என்ற அரிய வகை கனிமம் இருப்பதை உறுதிப்படுத்திஉள்ளது.
இந்த எட்டு மாநிலங்களில் உள்ள படிமங்களில் மட்டும் 1,315 கோடி கிலோ மோனசைட் கனிம வளம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் உள்ள கடற்கரை, செம்மண் மற்றும் உள்நாட்டு வண்டல் மண்ணில், 723 கோடி கிலோ அளவு அரிய மண் ஆக்சைடு வளங்கள் இருப்பதாகவும், கூடுதலாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள கடினப் பாறைகளில், 129 கோடி கிலோ அளவில் அதே வளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மோனசைட், கதிரியக்கத் தனிமங்களான யுரேனியம் மற்றும் தோரியத்துடன் தொடர்புடையதால், அது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பொருளாகக் கருதப்படுகிறது.
தொழில்நுட்பமின்மை அதற்கான சுரங்கம், பதப்படுத்துதல், சுத்திகரிப்பு ஆகியவை மத்திய அரசின் கடும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. அரிய கனிம வளங்கள் துறையில், உலகளவில் இந்தியா, முதல் நான்கு நாடுகளில் ஒன்றாக உள்ளது.
நம் நாட்டில் அரிய கனிம வளங்களும், பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்புக்கான திறன்கள் இருந்தாலும், போதுமான தொழில்நுட்பமின்மை, அவற்றை உலக சந்தைக்கு ஈடாக மாற்ற முடியாத நிலை இருப்பதால், இந்தக் கனிமங்களின் வணிகச் சுரங்கம் மற்றும் பதப்படுத்துதல் குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan