தி.மு.க.,வினர் சம்பாதிக்க வினோத கல்வி கொள்கை: பா.ஜ.,
3 மாசி 2026 செவ்வாய் 07:26 | பார்வைகள் : 1453
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, கடந்த 2021 - 22ல் இருந்து, தற்போது மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், தொடக்கப் பள்ளி வகுப்புகளில், பூஜ்ஜியத்தில் இருந்து, 2.70 சதவீதமாகவும், நடுநிலைப் பள்ளிகளில், பூஜ்ஜியத்தில் இருந்து, 2.80 சதவீதமாகவும், உயர் நிலை வகுப்புகளில், 4.47 சதவீதத்தில் இருந்து, 8.50 சதவீதமாகவும் அதிகரித்துள்ளன.தனியார் பள்ளிகள் நடத்தும் தி.மு.க.,வினர், பணம் சம்பாதிக்க, அரசு பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் என, அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல், கட்டமைப்பை, சிதைத்ததே, இதற்கு காரணம்.
உலகத்தரம் வாய்ந்த கல்வியை, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க தி.மு.க., அரசு கொண்டு வந்த வினோத கல்விக் கொள்கை, ஒரு தோல்வி அடைந்த கல்விக் கொள்கை என்பது நிரூபணமாகி இருக்கிறது.
ஏழை குழந்தைகளின் எதிர்காலத்தை, கொஞ்சம்கூட கருத்தில் கொள்ளாமல், தி.மு.க., அரசு கல்வியை வியாபாரமாக்கி, நடுத்தர குடும்பத்தினர் மீது, பெரும் கடன் சுமையை திணித்திருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan