இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு
3 மாசி 2026 செவ்வாய் 04:18 | பார்வைகள் : 1987
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களுக்கான பரஸ்பர வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு அதிக வரி விதித்தது. இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. விரைவில் ஒப்பந்தம் இறுதியாகலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைப்பேசியில் பேசியதாக நமது நாட்டிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறியிருந்தார்.
விவாதம்
இதனைத் தொடர்ந்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடியுடன் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எனது சிறந்த நண்பர். அவரது நாட்டின் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர். வர்த்தகம், ரஷ்யா உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவிட்டு, அமெரிக்காவிடம் கூடுதலாக எண்ணெய் வாங்க ஒப்புக் கொண்டுள்ளார். வெனிசுலாவிடம் இருந்தும் வாங்க முடிவு செய்துள்ளார். இது தற்போது நடக்கும் உக்ரைன் போரால் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதை நிறுத்த உதவும். பிரதமர் மோடி மீதான மரியாதை , நட்பு காரணமாகவும், அவரது கோரிக்கையின் பேரிலும் இந்தியா - அமெரிக்கா இடையே உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம்.
இதன் மூலம் அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறையும். அமெரிக்க பொருட்கள் மீதான வரியை பூஜ்ஜியமாக குறைக்கவும் இந்தியா ஒப்புக் கொண்டது. அமெரிக்க பொருட்களை கூடுதலாக வாங்க மோடி உறுதிபூண்டுள்ளார். 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்ற பொருட்களை இந்தியா வாங்கும்.
இந்தியா உடனான நமது நட்பு சிறப்பானது. வரும் காலங்களில் இது இன்னும் வலுப்பெறும். நானும் பிரதமர் மோடியம் விஷயங்களை சாதிப்பவர்கள். பெரும்பாலானவர்கள் இது பற்றி கூற முடியாத விஷயம். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan