Paristamil Navigation Paristamil advert login

3 கடமையை மனதில் வைத்து பட்ஜெட் உருவாக்கம்: நிர்மலா சீதாராமன்

3 கடமையை மனதில் வைத்து பட்ஜெட் உருவாக்கம்: நிர்மலா சீதாராமன்

1 மாசி 2026 ஞாயிறு 12:09 | பார்வைகள் : 684


மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும் மற்றும் இளைஞர்கள் நலன் ஆகிய கடமைகளை  மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 01) காலை 11:00 மணிக்கு தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக ஒன்பது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார். பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

* புனிதமான தைப்பூச நாளில் நாட்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம். இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட்  இருக்கும்.

* தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது.

* இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமையும்.

* தமிழகம், கேரளா, ஒடிசாவில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் அமைக்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முதலீட்டு வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக ஆக உயர்த்தப்படும்.

* பாஜ ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்துள்ளோம். இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறுகிறது. சீர்த்திருத்தங்களால் மக்கள் பலன் அடைந்துள்ளனர்.

* பாஜ அரசின் நடவடிக்கையால், இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசின் நடவடிக்கையால் மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

* நீண்ட கால தொழில்முதலீட்டு திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறோம்.

* வளர்ச்சியின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் செல்வதை உறுதி செய்கிறோம்.

* மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும் மற்றும் இளைஞர்கள் நலன் ஆகிய 3 கடமைகளை  மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்