Paristamil Navigation Paristamil advert login

காங்கிரசுக்கு தி.மு.க. இறுதிக்கெடு?

காங்கிரசுக்கு தி.மு.க. இறுதிக்கெடு?

3 பங்குனி 2026 செவ்வாய் 16:59 | பார்வைகள் : 331


சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக தொகுதிகள் கேட்டு முரண்டு பிடித்து வருகிறது.

ஆரம்பத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றும் கோஷம் எழுப்பியது. அதன்பிறகு, 41 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று தி.மு.க. தலைமையை வலியுறுத்தியது. ஆனால், தி.மு.க. தரப்பில் 25 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே தர முடியும் என்று கூறப்பட்டது.இதை ஏற்றுக்கொள்ளாத நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.  

கடைசி முயற்சியாக, மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்திடம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த கட்சி தலைமை கோரியது. .மேற்காசியாவில் பதற்ற சூழல்; துபாயில் இருந்து 149 பயணிகளுடன் டெல்லி வந்த முதல் விமானம்.

அதன்படி, ப.சிதம்பரம் இன்று மதியம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, கனிமொழி எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது. இடையே சிறிது நேரம் மு.க.ஸ்டாலின் - ப.சிதம்பரம் ஆகியோர் தனியாகவும் ஒரு அறையில் சென்று பேசியுள்ளனர்.

கடைசியாக, காங்கிரஸ் தரப்பில் 35 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தி.மு.க. தரப்பிலோ, 28 தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாம்.   இதை ஏற்றுக்கொண்டால், இன்று இரவே உங்கள் முடிவை சொல்லுங்கள். நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட்டும், அடுத்த ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட்டும் தருகிறோம் என்று தி.மு.க. தரப்பில் கூறப்பட்டதாம். அவ்வாறு இன்று இரவுக்குள் காங்கிரஸ் கட்சி முடிவை அறிவிக்கவில்லை என்றால், நாளை (புதன்கிழமை) கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீட்டை முடித்து விடுவோம் என்று தி.மு.க. தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளதாம்.  

எனவே, காங்கிரஸ் கட்சி இறங்கி வந்து தி.மு.க. தருவதை ஏற்றுக்கொள்ளுமா?, அல்லது த.வெ.க. பக்கம் சாய்ந்துவிடுமா? என்பது இன்று அல்லது நாளைக்குள் தெரிந்துவிடும்.  . இதற்கிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் மாற்றம் செய்யப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அப்போது தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.  

தற்போது, அவர் மாற்றப்பட்டு, மாணிக்கம் தாகூர், விஸ்வநாதன், செல்லகுமார், டாக்டர் விஷ்ணுபிரசாத் ஆகிய 4 பேரில் ஒருவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026