Paristamil Navigation Paristamil advert login

திமுகவால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது ? இபிஎஸ் கேள்வி

திமுகவால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது ? இபிஎஸ் கேள்வி

2 பங்குனி 2026 திங்கள் 06:41 | பார்வைகள் : 323


15 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்துக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தது என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்:

மதுராந்தகத்தில் நடந்தது மிகப்பெரிய மாநாடு. கையில் புத்தகம் எடுக்க வேண்டிய மாணவர்கள், கையில் கஞ்சா எடுக்கிறார்கள் என்றால், ஸ்டாலினின் தவறான ஆட்சி. சனாதன தர்மத்தை அழிப்போம் என்று சொன்னார் உதயநிதி. மோசமான ஆட்சி. சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு ஸ்டாலினின் ஆட்சி. உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என ஒரு ஆட்சி நடக்கிறது.இது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடக்கம் தேர்தல். இதில் தர்மம் வெல்ல வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரன்

மதுரை என்றாலே வீரத்துக்கும், விவேகத்துக்கும் பெயர் பெற்ற பூமி. மதுரை என்றால், பாண்டிய மன்னர்களும், தமிழ் சங்கமும் தான் நினைவுக்கு வரும்.களப்பிரர்களிடம் இருந்து மதுரையை மீட்ட கடுங்கோன் பாண்டிய மன்னனை போல் பிரதமர் மோடி இங்கு வந்துள்ளார்.

தமிழகத்தில் இருண்ட ஆட்சியை மக்கள் விரும்பாத ஆட்சியை, எங்கும் ஊழல், எதிலும் ஊழல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என அனைவரும் பயப்படும் ஆட்சியை, ஊழலைத் தவிர வேறு ஓன்றும் இல்லை என அனைவரும் வருந்தும் ஆட்சியை, அனைவரும் போராடும், இந்த ஊழல் ஆட்சி நடக்கிறது.இந்த ஆட்சியை வீழ்த்த பிரதமருக்கு உறுதுணையாக இருப்போம். திமுக ஆட்சியை வீழ்த்தி தேஜ கூட்டணி வெற்றி பெறும். தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி

இந்த கூட்டம் வெற்றி பெற்று இருக்கிறது. தமிழகம் சமூக நீதியின் பிறப்பிடம்.  ஆனால், கடந்த ஐந்தாண்டு காலத்தில் திமுக அரசு, சமூக நீதியை நூறு அடி ஆழமான பள்ளத்தைதோண்டி அதில் முழுமையாக புதைத்துவிட்டது. அதற்கு தமிழக மக்கள் முதல்வர் ஸ்டாலனை மன்னிக்க மாட்டார்கள். கடந்த ஆறு ஆண்டு காலத்தில் இந்திய அளவில் சமூக நீதியில் 3 பெரிய சாதனைகளை பிரதமர் மோடி செய்துள்ளார்.

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரத்தை கொடுத்தவர் பிரதமர் மோடி.ரோகிணி ஆணையத்தை உருவாக்கி இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டில் வேறுபாடுகளை கண்டறிய முயற்சி செய்தார்.

உண்மையில் சமூக நீதி என்றால் அது பிரதமர் மோடி தான். ஆனால் சமூக நீதி எங்கள் உயிர் மூச்சு என சொல்லும் ஸ்டாலின் சொல்கிறார். உங்களுக்கும் ஸ்டாலினுக்கும் எள்ளளவு சம்பந்தம் கிடையாது. என்ன சம்பந்தம் இருக்கிறது. முதல்முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி  இட ஒதுக்கீட்டை உயர்த்தியது பாஜ ஆளும் பீஹார்.  ஆனால்,சமூக நீதியின் பிறப்பிடமானதமிழகத்தில் நடந்து இருக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம். சட்டசபைக்குள் முதல்வர் பொய் சொல்கிறார்.  எங்களுக்கு அதிகாரம் இல்லை என பலமுறை பொய் சொல்லி உள்ளார். பிறகு எப்படி, பீஹார், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் கணக்கெடுப்பு நடத்தினர்.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்தவர் ஜெயலலிதா. அவர் இல்லையென்றால், உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கும். நீர் மேலாண்மைக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் கொடுக்கிறார்.  குஜராத்தில் புரட்சி செய்துள்ளார். தமிழகத்தில்  60 ஆண்டு கால கோரிக்கையான குண்டாறு - காவிரி இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு இபிஎஸ் ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இது கிடப்பில் போட்டு விட்டனர். இது தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய துரோகம். தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும்.

அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்

தமிழகத்தை இந்தியா திரும்பி பார்க்கிறது. யார் ஆட்சி செய்ய வேண்டும், செய்யக்கூடாது என நடக்கும் தேர்தல் வர உள்ளது. 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். எம்ஜிஆர் முதலில் வெற்றி பெற்றது இந்த மாவட்டம் தான். ஜெயலலிதா முதல்முறை போட்டியிட்டதும் தென் மாவட்டம் தான்.  அதிமுக தலைவர்களுக்கு எப்போதும்  ஆதரவாக இருந்தது தென் மாவட்டம் தான்.எம்ஜிஆர் கட்சி துவங்கியதும் முதல்முறை தேர்தலை சந்தித்தது தென் மாவட்டம் தான். நடக்கும் சட்டசபை தேர்தலிலும் தேஜ கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்க தென் மாவட்ட மக்கள் உதவியாக  இருப்பார்கள். ஜாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட கட்சி அதிமுக.  சிறப்பாக செயல்படுகிறது. பல்வேறு சோதனைகளை கண்ட கட்சி அதிமுக.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிமுக தலைவர்கள் ஆட்சி காலத்தில் பல திட்டங்களை கொண்டு வந்தனர். அதனால் மாநிலம் வளர்ச்சி பெற்றுள்ளது. மோடி பிரதமர் ஆக பதவியேற்ற பிறகு  நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. உலக நாடுகள் திரும்பி பார்க்கின்றன. பொறாமைப்படுகின்றன. தமிழகத்திற்கு எந்த வளர்ச்சியையும் மத்தியஆட்சியாளர்கள் கொடுக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்துவருகிறார். இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்னர் 4,400 கோடி ரூபாய் திட்டத்தை துவக்கி வைத்து உள்ளார் தமிழகம் வரும்போது எல்லாம்  பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பிரதமர் மோடி ஒதுக்கி உள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணாமாக மத்திய அரசு மீது பொய் பிரசாரம் செய்து வருகிறார்.15 ஆண்டுகள் மத்தியில் திமுக ஆட்சியில்  இருந்தபோது தமிழகத்துக்கு என்ன கிடைத்தது. ஊழல் செய்வதையும், கொள்ளை அடிக்கவும் செய்தனர். மந்திரி பதவி கிடைத்தால் ஊழல் செய்கிறது.காற்றில் கூட ஊழல் செய்தது. விஞ்ஞான முறையில் ஊழல் செய்த கட்சி திமுக.தமிழக மக்களுக்கு வளம் இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக. அதிமுகவின் பல கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றது. திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026