பரபரப்பில் மத்தியகிழக்கு - எலிசே மாளிகையில் அவசர கூட்டம்!!
1 பங்குனி 2026 ஞாயிறு 16:00 | பார்வைகள் : 2457
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை எலிசே மாளிகையில் அவசர கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.
அயதுல்லா அலி காமேனி அவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரான் மூர்க்கத்தனமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு எலிசே மாளிகையில் ‘பாதுகாப்பு கூட்டம்’ ஜனாதிபதி மக்ரோன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
அதை அடுத்து, 24 மணிநேரத்துக்குள் தற்போது இரண்டாவது கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு எலிசேயில் முக்கிய பிரமுகர்கள் சந்திக்கும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இடம்பெற உள்ளது.
மத்திய கிழக்கில் சிக்கிக்கொண்டுள்ள பிரெஞ்சு மக்கள், விமான சேவைத்தடை, இந்த யுத்தத்தில் பிரான்சின் நிலைப்பாடு என பல முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்பட உள்ளன.
”தனது மக்களை ஒடுக்கி, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினரை இழிவுபடுத்திய இரத்தவெறி கொண்ட சர்வாதிகாரி." என காமேனியை பிரெஞ்சு அரச பேச்சாளர் Maud Bregeon குறிப்பிட்டார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan