மார்ச் மாத மாற்றங்கள்!!
1 பங்குனி 2026 ஞாயிறு 16:54 | பார்வைகள் : 2632
மார்ச் 1 முதல் பல பொருளாதார மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன. 150 யூரோவிற்கு குறைவான, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிருந்து வரும் சிறிய பார்சல்களுக்கு ஒவ்வொரு பொருள் வகைக்கும் 2 யூரோக்கள் வரி விதிக்கப்படும். இதனால் ஆசிய இணைய தளங்களில் வாங்கும் பொருட்களின் விலை உயரும்.
மேலும், எரிவாயு குறியீட்டு விலை 3.8% உயர்ந்து 1 kWhக்கு 14 சென்ட் ஆக உயர்கிறது, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கட்டாயமாக இதே விலை பொருந்தாது.
சிகரெட் விலைகளும் மீண்டும் உயர்கின்றன. சில நிறுவனங்களின் 20 சிகரெட் பக்கெட்டுகள் சுமார் 13 முதல் 14 யூரோக்கள் வரை ஆகும். சுருட்டு புகையிலை விலையும் அதிகரிக்கிறது.
இதே நேரத்தில், 2011க்கு பிறகு திறக்கப்பட்ட 15 ஆண்டுகள் பழைய PEL சேமிப்பு திட்டங்கள் தானாக முடிவுக்கு வந்து சாதாரண சேமிப்பு கணக்குகளாக மாறத் தொடங்குகின்றன.
மருத்துவமனை கட்டணங்களில் கூடுதல் சுமை ஏற்படும். தினசரி மருத்துவமனை கட்டணம், மனநல பிரிவு கட்டணம் மற்றும் அவசர சிகிச்சை கட்டணங்கள் அனைத்தும் உயர்த்தப்படுகின்றன. பொதுவாக இவை காப்பீட்டால் ஈடுசெய்யப்பட்டாலும், காப்பீடு இல்லாதவர்களுக்கு நேரடி செலவாகும்.
குடும்ப உதவித்தொகையில் மாற்றம் செய்யப்பட்டு, இரண்டாவது குழந்தைக்கு 14 வயதில் வழங்கப்படும் கூடுதல் உதவித்தொகை இனி 18 வயதில் மட்டுமே வழங்கப்படும்.
அதேபோல், சில பிராந்தியங்களில் வாகன பதிவு (Carte grise) கட்டணமும் உயர்கிறது.
- Nouvelle-Aquitaine பகுதியில் வரி 53 → 58 யூரோக்களாக உயர்கிறது.
- Île-de-France பகுதியில் 54.95 → 68.95 யூரோக்களாக அதிகரிக்கிறது.
மேலும், 50 cc-க்கு குறைவான இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேகம் சோதிக்க புதிய கருவி (céléromètre) பயன்படுத்தப்படும். சட்டப்படி 45 km/h வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், சட்டவிரோதமாக வேகம் அதிகரிக்கப்பட்டதா என்பதை பரிசோதிக்க இது பயன்படுத்தப்படும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan