Paristamil Navigation Paristamil advert login

53% குடும்பங்கள் வருமானவரி செலுத்தவில்லை: முன்னாள் பொருளாதார அமைச்சர் தெரிவிப்பு!!

53% குடும்பங்கள் வருமானவரி செலுத்தவில்லை: முன்னாள் பொருளாதார அமைச்சர் தெரிவிப்பு!!

28 மாசி 2026 சனி 08:22 | பார்வைகள் : 1189


முன்னாள் பொருளாதார அமைச்சர் எரிக் லொம்பாரட்  சுமார் 50,000 செல்வந்த குடும்பங்களுக்கு அவர்களின் நிதிச் சொத்துகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த வரி  வருமானமே உள்ளது என தெரிவித்துள்ளார். நிலச் செல்வ வரி (IFI) செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லாதிருந்தாலும், அதிக அளவில் நிதி முதலீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களும் இதில் அடங்கும். இவர்களில் சிலர் சட்டபூர்வமான “அதிகப்படியான வரி மேம்படுத்தல்” முறைகள் மூலம் தங்களின் வரி செலுத்தும் தொகையை குறைக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது பிரான்ஸ் மக்களில் 0.1% முதல் 0.3% வரை பாதிக்கலாம் என்றும், இந்த விவகாரத்தை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்ர். 2024ஆம் ஆண்டு 186,000 குடும்பங்கள் IFI-க்கு உட்பட்டன; அதில் 13,335 குடும்பங்களுக்கு குறைந்த வருமானம் காரணமாக வருமானவரி விதிக்கப்படவில்லை. 

பிரான்சில் மொத்தமாக 53% குடும்பங்கள் வருமானவரி செலுத்தவில்லை. வரி விதிப்பு சொத்து மற்றும் நிதிச் சேமிப்புகளின் அடிப்படையிலும் இருக்க வேண்டும் என லொம்பாட் கூற, அரசு பல்வேறு நிலைகளை ஆய்வு செய்து விரிவான பகுப்பாய்வு செய்ய உறுதியளித்துள்ளது. தேசிய சபையும் உயர்ந்த செல்வங்களின் வரி பங்களிப்பு குறித்து விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.