மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம் அடைந்த நிலையில், பிரான்ஸ் அரசின் பயண ஆலோசனைகள்!!
27 மாசி 2026 வெள்ளி 22:31 | பார்வைகள் : 3530
France தனது குடிமக்களுக்கு Israel, Jerusalem மற்றும் Cisjordanie பகுதிகளுக்கு சுற்றுலா மற்றும் குடும்பப் பயணங்கள் செல்ல வேண்டாம் என அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலைகள் மற்றும் அதன் பிராந்திய விளைவுகள் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்திய சூழ்நிலைகள் வேகமாக மாறக்கூடும் என்பதால், வான்வழி மூடப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் விமான சேவைகள் பல நாட்களுக்கு ரத்து செய்யப்படவோ அல்லது ஒத்திவைக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் இல்லையெனில் பயணத் திட்டங்களை ஒத்திவைக்குமாறு குடிமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேலில் ஏற்கனவே தங்கியுள்ள பிரான்ஸ் குடிமக்கள் ‘Fil d’Ariane’ தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும், அருகிலுள்ள பாதுகாப்பு தங்குமிடங்களை முன்கூட்டியே அடையாளம் காண வேண்டும், தேவையெனில் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan