2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தமிழக நகரம்
27 மாசி 2026 வெள்ளி 14:45 | பார்வைகள் : 1413
இந்தியா உலகின் மிகப் பழமையான நாகரிக வரலாற்றைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
கலாச்சாரம், பண்பாடு மற்றும் மத பாரம்பரியத்தில் இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முக்கிய இடம் வகித்து வருகிறது.
5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்தியாவில் பல பேரரசுகள் உருவாகி மறைந்துள்ளன.
நீண்ட வரலாறு கொண்ட இந்தியாவில், சில நகரங்கள் இன்று வரை அதன் அடையாளமாகத் திகழ்கின்றன.
அவை இந்தியாவின் ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை வளர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
அந்தவகையில், இந்தியாவின் பழமையான நகரங்களில் தமிழக நகரங்களில் ஒன்றான மதுரையும் ஒன்று.
மதுரை சுமார் 2,500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, மக்கள் தொடர்ந்து வாழும் மிகத் தொன்மையான நகரங்களில் ஒன்றாகும்.
இது பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியது மற்றும் கிமு 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழடி நாகரிகத்துடன் தொடர்புடையது.
இது தமிழ் கலாச்சாரத்தின் மையமாகவும், தூங்கா நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
கோவில்களின் நகரம் என்று அழைக்கப்படும் மதுரை, 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது.
தமிழகத்தில் வைகை ஆறு கரையில் அமைந்துள்ள மதுரை பல நூற்றாண்டுகளாக மத மற்றும் கலாச்சார மையமாக இருந்து வருகிறது.
தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும் இந்த நகரம் முக்கிய பங்கு வகித்துள்ளது.
மதுரையின் மையத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் திராவிட கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan