கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது
27 மாசி 2026 வெள்ளி 13:33 | பார்வைகள் : 1950
சட்டவிரோதமான முறையில், வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியாக கடத்திச்செல்ல முயன்ற இரு இலங்கை பயணிகள் இன்று வெள்ளிக்கிழமை (27) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகள் சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும், மற்றையவர் கல்முனைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று (27) அதிகாலை 12.00 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK -648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 86,800 வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கொண்ட 434 சிகரெட் கார்டூன்களும் 30 மின்னணு சிகரெட்டுகளும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan