Paristamil Navigation Paristamil advert login

புதிய வாகனங்கள் வாங்குபவர்கள் கவனத்திற்கு! - புதிய மாற்றம்!

புதிய வாகனங்கள் வாங்குபவர்கள் கவனத்திற்கு! - புதிய மாற்றம்!

27 மாசி 2026 வெள்ளி 11:42 | பார்வைகள் : 1409


புதிய வாகனங்கள் வாங்க உள்ளவர்களுக்கு, மார்ச் 1 ஆம் திகதி முதல் முக்கிய சில மாறுதல்கள் ஏற்பட உள்ளன.

வானங்களை பதிவு செய்யும் கட்டணம் மாகாண ரீதியில் அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கு 54.95€ யூரோக்களாக  இந்த கட்டணம் உயர உள்ளது.

மேலும், Nouvelle-Aquitaine மாகாணத்துக்கு கட்டணம் 9.4% சதவீதம் அதிகரித்து 58€ யூரோக்களாக அதிகரிக்க உள்ளது.

அதேவேளை, இந்த மார்ச் மாதத்தோடு மொத்தமாக ஐந்து மாகாணங்களுக்கு ( Brittany, Centre-Val de Loire, Normandy, Grand Est,  Provence-Alpes-Côte d'Azur, Hauts-de-France)  பதிவுக்கட்டணம் 60€ யூரோக்களை எட்டிப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.