Shein, Temu… சிறிய பார்சல்களுக்கு விதிக்கப்பட்ட புதிய வரி அமுலுக்கு வருகிறது!!
27 மாசி 2026 வெள்ளி 08:16 | பார்வைகள் : 1666
2026 பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்ட சிறிய பார்சல்களுக்கு 2 யூரோ வரி மார்ச் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு மேலாக, ஜூலை மாதத்தில் Union européenne தீர்மானித்த 3 யூரோ கூடுதல் வரியும் சேர்க்கப்படும். இதனால் சீன ஆன்லைன் தளங்களில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் விலை அதிகரிக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வரும் பல பார்சல்களுக்கு 2 யூரோ கட்டணம் விதிக்கப்படும்.
இதில் எந்த பார்சல்கள் பாதிக்கப்படும்?
“சிறிய பார்சல்கள்” என்பது 150 யூரோவுக்கு குறைவான மதிப்புள்ள அனுப்புதல்களை குறிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகள் என்றால் முக்கியமாக ஆசியா நாடுகளை குறிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதிகளில் இருந்து இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது.
Shein, Temu, AliExpress போன்ற தளங்களின் வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதுவரை இத்தளங்கள் சில வரி விலக்குகளைப் பெற்றிருந்தன. இது ஐரோப்பிய விற்பனையாளர்களுக்கு அநியாய போட்டியாக கருதப்பட்டது. புதிய வரி இந்த சமநிலையை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
2 யூரோ – ஒவ்வொரு பொருளுக்கா? அல்லது ஒவ்வொரு பார்சலுக்கா?
முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது: 2 யூரோ வரி ஒவ்வொரு பொருளுக்கும் அல்ல; ஒவ்வொரு “பொருள் வகை”க்கும் (catégorie) விதிக்கப்படும். உதாரணாக:
நீங்கள் 3 டி-ஷர்ட்கள் வாங்கினால் → 2 யூரோ மட்டுமே.
3 டி-ஷர்ட்கள் + 2 விளையாட்டு பொருட்கள் வாங்கினால் → 4 யூரோ (டி-ஷர்ட்களுக்கு 2 யூரோ + விளையாட்டு பொருட்களுக்கு 2 யூரோ).
சிறிய பார்சல்களில் உள்ள பொருட்களின் சராசரி மதிப்பு 6.40 யூரோ மட்டுமே (2022ல் இது 11.30 யூரோ). எனவே, இந்த வரி குறைந்த விலை பொருட்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஜூலை 1 முதல், இந்த 2 யூரோ வரிக்கு கூடுதலாக 3 யூரோ சுங்க வரியும் அமுலுக்கு வரும். இந்த நடவடிக்கை 2028 வரை குறைந்தது நீடிக்கும். இரண்டு வரிகளின் சட்டபூர்வ நிலை வேறுபட்டது:
- ஐரோப்பிய ஒன்றியத்தின் 3 யூரோ – சுங்கவரி (une taxe sur la marchandise)
- பிரான்சின் 2 யூரோ – நிர்வாக கட்டணம் (des frais de gestion)
இரண்டும் சேர்த்து வசூலிக்கப்படும். உதாரணாக
3 டி-ஷர்ட்கள் → 5 யூரோ (2 + 3)
3 டி-ஷர்ட்கள் + 2 விளையாட்டு பொருட்கள் → 10 யூரோ
மேலும், 2026 நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியம் பிரான்ஸ் அறிமுகப்படுத்திய நிர்வாக கட்டணத்திற்கு இணையான புதிய கட்டண முறையை அமுல்படுத்தும். அதனால் தற்போதைய பிரான்ஸ் நடைமுறை மாற்றப்படும், ஆனால் நடைமுறையில் பெரிய மாற்றம் இருக்காது.
இந்த வரியை நீங்கள் நேரடியாக செலுத்த வேண்டுமா?
இந்த வரியை நுகர்வோர் நேரடியாக செலுத்த வேண்டியதில்லை. அது விற்பனையாளர் அல்லது இறக்குமதியாளர் மீது விதிக்கப்படும். ஆனால், சீன தளங்கள் இந்த கூடுதல் செலவினத்தின் ஒரு பகுதியையாவது விலைகளில் சேர்க்க வாய்ப்பு அதிகம். அதனால், இறுதியில் நுகர்வோர்களுக்கு விலை உயர்வு ஏற்படுவது சாத்தியம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan