Paristamil Navigation Paristamil advert login

சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாகும் ரம்யா நம்பீசன்?

சிவகார்த்திகேயனுக்கு  அம்மாவாகும் ரம்யா நம்பீசன்?

26 மாசி 2026 வியாழன் 14:55 | பார்வைகள் : 311


வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் அப்பா, மகன் என 2 வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அப்பாவுக்கு ஜோடி ரம்யா நம்பீசன், மகனுக்கு ஜோடி கல்யாணி பிரியதர்ஷன் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக தகவல். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

அப்பா, மகன் பற்றி ஏகப்பட்ட படங்கள் வந்திருந்தாலும் இது சயின்ஸ் பிக்சன் பின்னணியில் இருக்கும். மாநாடு பாணியில் டைம் டிராவல் படமாக இருக்கலாம். ஹாலிவுட் நிறுவனங்கள் உதவியுடன் உருவாக இருப்பதால் படப்பிடிப்பு முடியவே 1 ஆண்டுக்கு மேல் ஆகும். ஆகவே, அதற்குள்ளாக 'சேயோன்' படத்தில் நடித்து முடித்துவிட முடிவு செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

'சேதுபதி, பீட்சா, சத்யா, குள்ளநரிக்கூட்டம், தர்மதுரை' போன்ற படங்களில் நடித்த ரம்யா நம்பீசன் உடல் எடை அதிகரிப்பு காரணமாக சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.