இளைஞர்களிடம் குறைந்த ‘சிகரெட்’ மோகம் - ஆனால் மற்றொரு ஆபத்து!
26 மாசி 2026 வியாழன் 07:28 | பார்வைகள் : 2083
இளைஞர்களிடையே சிகரெட் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளின் பழக்கம் குறைவடைந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேவேளை, மற்றொரு ஆபத்து அவர்களைச் சூழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
l’OFDT (போதைப்பொருள் மற்றும் புகையிலமை பாவனையாளர்களை கண்காணிக்கும் பிரெஞ்சு சபை) மேற்கொண்ட ஆய்வில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புகையிலை பாவனை இளைஞர்களிடம், குறிப்பாக மாணவர்களிடம் குறைவடைந்துள்ளது. கொவிட் 19 தொற்று காலத்தின் பின்னர் வெகுவாக இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் மிக கணிசமாக இந்த மாற்றம் பதிவாகியுள்ளது. 11.4% சதவீத மாணவர்களிடம் இருந்த இந்த புகையிலை பழக்கம், 7.7% சதவீதமாக வீழ்ந்துள்ளது.
அதேவேளை, புதிய ஆபத்தாக அவர்களிடம் ஈ.சிகரெட் எனப்படும் இலத்திரனியல் சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. புதிய மோகப்பொருளாக இது உள்ளது எனவும், எவ்வாறாயினும், அதன் ‘ட்றெண்ட் தன்மை’ காரணமாக அது பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
5.6% சதவீதத்தில் இருந்து 6.8% சதவீதமாக ஈ.சிகரெட் பாவனை அதிகரித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan