Paristamil Navigation Paristamil advert login

வருகிறது சஹாரா புயல்! - கார் உரிமையாளர்கள் அவதானம்!!

வருகிறது சஹாரா புயல்! - கார் உரிமையாளர்கள் அவதானம்!!

25 மாசி 2026 புதன் 13:55 | பார்வைகள் : 3485


இந்த வாரத்தில் சஹாரா மணற்புயல் பிரான்சை தாக்க உள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

சஹாரா பாலைவனத்தில் இருந்து புறப்பட்டு காற்றில் கலந்த இந்த மணற்புயல், இவ்வார வெள்ளிக்கிழமை பிரான்சின் வடக்குப்பகுதியை ஆக்கிரமிக்கும் எனவும், பின்னர் அங்கிருந்து மேற்கு வழியாக நாட்டைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாசப்பிரச்சனை, எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் அவதானமாக இருக்கும்படியும், உடற்பயிற்சிகளில் ஈடுபடவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் மண் துகள் படியும் எனவும், இது தொடர்பில் வாகன சாரதிகள் அவதானமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது