எச்சரிக்கை: Hema கடைகளில் விற்கப்பட்ட குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களில் அஸ்பெஸ்டாஸ்!!
23 மாசி 2026 திங்கள் 21:25 | பார்வைகள் : 693
Rappel Conso அறிவிப்பின் படி, Hema கடைகளில் விற்கப்பட்ட பல குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், அவற்றில் அஸ்பெஸ்டாஸ் (amiante) இருப்பது கண்டறியப்பட்டதால், பிரான்ஸ் முழுவதும் திரும்பப் பெறப்படுகின்றன.
“இந்த விளையாட்டு பொருட்களில் குறைந்தது ஒரு சிறிய குழாயில் அஸ்பெஸ்டாஸ் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான பொருள்; அதன் நார்களை சுவாசித்தால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்,” என்று விளக்கப்பட்டுள்ளது.
குறிபிடப்பட்ட மூன்று விளையாட்டுப் பொருட்கள்

முதலில், மணல் விளையாட்டுகள் மற்றும் கைவினைப் பொருட்கள் திரும்பப் பெறப்படுகின்றன. இவை 18 மார்ச் 2024 முதல் 11 பிப்ரவரி 2026 வரை விற்பனை செய்யப்பட்டன.

அடுத்து, ஆறு மணல் தெளிப்பான் (lot de six sableurs) கொண்ட தொகுப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இது 18 மார்ச் 2024 முதல் 11 பிப்ரவரி 2026 வரை விநியோகிக்கப்பட்டது.
திரும்பப் பெறப்பட்ட குறிப்பு:
GTIN 15900035 – அனைத்து தொகுப்புகளும்

இறுதியாக, மணல் உருவாக்க அட்டைகள் மற்றும் காந்தங்கள் (cartes et magnets création en sable) ஆகியவையும் இதே காரணத்தால் திரும்பப் பெறப்படுகின்றன. இவை 6 பிப்ரவரி 2023 முதல் 16 மார்ச் 2025 வரை விற்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட குறிப்புகள்:
GTIN 15920121 – அனைத்து தொகுப்புகளும்
GTIN 15920122 – அனைத்து தொகுப்புகளும்
மேலும் தகவல்களுக்கு, 01.40.39.94.61 என்ற எண்ணில் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளலாம். திரும்பப் பெறும் நடைமுறை வரும் ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan