Paristamil Navigation Paristamil advert login

கோல்டன் ஹாரிஸான் ஏவுகணை: இந்தியாவுக்கு வழங்க இஸ்ரேல் விருப்பம்

கோல்டன் ஹாரிஸான் ஏவுகணை: இந்தியாவுக்கு வழங்க இஸ்ரேல் விருப்பம்

24 மாசி 2026 செவ்வாய் 13:16 | பார்வைகள் : 188


இஸ்ரேல் நாட்டின், 'கோல்டன் ஹாரிஸான்' ஏவுகணையை வாங்குவது குறித்து நம் நாடு தீவிரமாக ஆ லோசித்து வருகிறது. '2,000 கி.மீ., தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணை, நம் பிரம்மோஸ் ஏவுகணையை விட பலமடங்கு வேகமாக பாயக்கூடியது' என, கூறப்படுகிறது.

உலக நாடுகள் ராணுவ பலத்தை அதிகரிப்பதில் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

குறிப்பாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், எதிரி நாட்டின் உள்ளே புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தும் ஏவுகணைகளை தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

அந்த வரிசையில் நம் நாடும், 'அக்னி' ரக ஏவுகணைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறது.

அணு ஆயுதங்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் படைத்த, 'அக்னி - 5' ஏவுகணையின் திறனை கூடுதலாக மேம்படுத்தி வருகிறது.

இந்தச் சூழலில், சுமார் 2,000 கி.மீ., தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை மின்னல் வேகத்தில் சென்று தாக்கும் திறன் படைத்த, 'கோல்டன் ஹாரிஸான்' ஏவுகணையை, நம் நாட்டிற்கு வழங்க இஸ்ரேல் முன் வந்துள்ளது.

நம் பிரம்மோஸ் ஏவுகணையை விட, பல மடங்கு வேகத்தில் பாயும் திறன் படைத்தது கோல்டன் ஹாரிஸான்.

பூமிக்கு அடியில் மிக ஆழமான இடத்தில் எதிரிகளின் மறைவிடங்கள் இருந்தாலும், 'கோல்டன் ஹாரிஸான்' கண்டுபிடித்து தகர்க்கும் ஆற்றல் படைத்தது. குறிப்பாக, அணு ஆயுத தளவாடங்களை கண்டுபிடித்து அழிப்பதில் வல்லமை பெற்றதாக கூறப்படுகிறது.

வழக்கமான ஏவுகணைகள், முதலில் தரைக்கு நிகராக பறந்து சென்று, அதன் பிறகே மேல் எழும்பி எதிரி களின் இலக்கை தாக்கும்.

ஆனால், 'கோல்டன் ஹாரிஸான்' ஆரம்பத்திலேயே வான்வெளியில் உயரப் பறந்து, பின்னர் மின்னல் வேகத்தில் எதிரிகளின் இலக்கை தாக்கும். எதிரிகளின் ரேடார் கண்களிலும் சிக்காமல் புகுந்து விளையாடும்.

சிம்மசொப்பனம்

போர் விமானத்தில் இருந்தபடி ஏவக்கூடிய பாலிஸ்டிக் வகை ஏவுகணை என்பதால், இதை எதிரிகளின் வான் பாதுகாப்பு அமைப்பு வழி மறிப்பது என்பது சிம்மசொப்பனமாக இருக்கும்.

குறிப்பாக, நம் 'சுகோய்' ரக போர் விமானங்களில், 'கோல்டன் ஹாரிஸான்' ஏவுகணையை எளிதாக பொருத்த முடியும் என்பதால், இதை வாங்குவது குறித்து நம் நாடு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

பிரதமர் மோடி, நாளை இரு நாள் பயணமாக இஸ்ரேல் புறப்பட்டு செல்கிறார். அப்போது இந்த ஏவுகணை குறித்த ஒப்பந்தம் இறுதியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்