தொகுதி பங்கீடு குறித்து கனிமொழியுடன் பேசியது என்ன? கிரிஷ் சோடங்கர் பதில்
24 மாசி 2026 செவ்வாய் 09:48 | பார்வைகள் : 280
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கனிமொழியுடன் பேசியது என்ன என்பது குறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. சென்னை வந்த காங். பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவரை தொடர்ந்து திமுக எம்.பி.கனிமொழியை காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சந்தித்து பேசினார்.
இதுகுறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டி;
திமுக எம்பி கனிமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. எத்தனை இடங்களை பெறுவது என்பது குறித்து திமுகவுடன் காங்கிரஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை திமுகவிடம் தெரிவித்து இருக்கிறோம்.
அது பற்றி பேசி வருகிறோம். அனைத்தும் இறுதியான பின்னர் உங்களுக்கு தகவல் தெரிவிப்போம். ராஜ்ய சபா சீட், உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் கனிமொழியுடன் பேசினோம். ஆட்சி அதிகாரம் குறித்து பேசவில்லை.
இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan