பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கை வெளியிட்டது மத்திய அரசு
24 மாசி 2026 செவ்வாய் 07:41 | பார்வைகள் : 1708
PRAHAAR என்ற தலைப்பில் பயங்கரவாதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட தேசிய கொள்கையின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தாண்டி, கிரிமினல் ஹேக்கர்கள் முதல் சைபர் தாக்குதல் மூலம் இந்தியாவை குறிவைப்பவர்களுக்கு எதிராகவும் இந்த கொள்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
நீர் , நிலம் மற்றும் வான் என அனைத்து பரப்பிலும் இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. மின்சாரம்,ரயில்வே, விமான நிலையம், துறைமுகங்கள், பாதுகாப்பு, அணுசக்தி நிலையங்கள் என பொருளாதாரத்திற்கு முக்கிய துறைகளான பாதுகாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.
எந்தவொரு குறிப்பிட்ட மதம், இனம், தேசியம் அல்லது நாகரிகத்துடனும் இந்தியா இணைக்கவில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. ஜிகாதி அமைப்புகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் ஆகியன தொடர்ந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி வருகிறது.
அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் ஸ்லீப்பர் செல் மூலம் இந்தியாவில் வன்முறையை தூண்டவும், வெளிநாட்டில் இருந்து செயல்படும் பிரிவினைவாதிகள், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும் சதி செய்கின்றனர்.
நாட்டின் எல்லைக்கு அப்பால் இருப்பவர்கள் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் டிரோன்கள் உள்ளிட்ட மூலம் அதிநவீன தொழில்நுட்பங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றனர். பயங்கரவாதத்துக்கு ஆட்கள் மற்றும் தளவாடங்களை குவிக்க பயங்கரவாத அமைப்புகள், கிரிமினல் நெட்வொர்க் ஏற்படுத்தி செயல்படுகின்றனர்.
டிஜிட்டல் தளங்களான டார்க் வெப் மற்றும் கிரிப்டோ மூலம் பயங்கரவாத கொள்கைகளை பரப்பவும், நிதி திரட்டும் பணியும் நடக்கிறது. ரசாயனம், உயிரியல், ரேடியோலாஜிக்கல், அணுசக்தி, டிஜிட்டல் உள்ளிட்டவற்றை பயங்கரவாதிகளுக்கு கிடைக்காமல் தடுக்கும் பணிகள் சவாலாக உள்ளன.
பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளை வலுப்படுத்த எப்ஐஆர் பதிவு செய்வது முதல் வழக்கு முடியும் வரை என விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் சட்டநிபுணர்களை இணைக்க வேண்டும்.
நாடு கடந்த பயங்கரவாதத்தை எதிர்கொள்ள தேசிய அளவில் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். வெளிநாட்டை தளமாக கொண்டகுழுக்கள், தாக்குதல் நடத்துவதற்கு உள்ளூர் கட்டமைப்புகளை நம்பி உள்ளன.
இந்திய இளைஞர்களை பிரிவினைவாத செயல்களுக்கு பயன்படுத்த பயங்கரவாத அமைப்புகள் முயற்சி செய்கின்றன. அடையாளம் காணப்பட்ட உடன் அத்தகைய நபர்கள் மீது உடனடியாக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் பின்விளைவுகள் குறித்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதபோதகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கொள்கையில் கூறப்பட்டு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan