பாஜ நடத்தும் சதுரங்க வேட்டை; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
24 மாசி 2026 செவ்வாய் 05:34 | பார்வைகள் : 1424
புலனாய்வு முகமைகளை மலிவாக பயன்படுத்தி, அரசியல் சதுரங்க வேட்டையை பாஜ நடத்திக் கொண்டிருக்கிறது,'' என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: புலனாய்வு முகமைகளை மலிவாக பயன்படுத்தி, அரசியல் சதுரங்க வேட்டையை பாஜ நடத்திக் கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐயை அழைத்து வந்தாலும் ஒரு கை பார்ப்போம். தமிழகத்தில் பலமுனைப் போட்டி இருக்கலாம்.
ஆனால், இது பலம் பொருந்திய போட்டியாக இல்லை. கவர்னர்கள் மூலமாக நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்துவதில் தொடங்கி, செயற்கையான நிதிச் சுமையை உருவாக்கி மாநிலங்களை முடக்க நினைப்பது வரைக்கும், அத்தனை செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது மட்டும்தான் அவர்களுக்கு தெரிந்த அரசியல். இதையெல்லாம் அரசியல் தளத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் எதிர்கொண்டு, 'வளர்ச்சி அரசியல் என்றால், தமிழகத்தை பாருங்கள்' என்று சொல்லும் அளவிற்கு Development Politicsக்கான அடையாளமாக தமிழகம் வளர்ந்திருக்கிறது. அதுவும் ஒரு தரப்புக்கான வளர்ச்சி இல்லை; 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற பரந்துபட்ட வளர்ச்சி.
பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று எல்லோரையும் 'Empower' செய்யும் Politicsயை நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம். நான் மக்களை நம்புபவன். மக்களுக்கான எங்களின் பயணத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழகத்தில் நடக்க இருப்பது, ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான தேர்தல். நான் உறுதியாக சொல்கிறேன்.
தமிழ்நாடு v/s என்டிஏ என்ற இந்த தேர்தலில் தமிழகம் தான் நிச்சயம் வெல்லும். எங்களைப் பொறுத்த வரைக்கும், சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, சகோதரத்துவம், மாநில சுயாட்சி உள்ளிட்ட கருத்தியல்கள் குறித்து இந்தியா முழுவதும் ஒரு பரந்துபட்ட பார்வை உருவாக வேண்டும் என்று நினைக்கிறோம்.
அதுதான், இந்தியாவிற்கு உண்மையான வளர்ச்சிப் பாதையை உருவாக்கும் என்று நான் நினைக்கிறேன். அந்தப் பாதையைக் காட்டுவதற்கான ஒளியாகதான், திராவிட மாடலை நாங்கள் அடையாளம் காட்டுகிறோம். இந்தப் பணியிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
என் உயரம் தெரியும்!
தேசிய அளவில் இண்டியா கூட்டணிக்கு தலைமை ஏற்பீர்களா' என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர், 'என் உயரம் எனக்குத் தெரியும்' என்று கூறினார். இது, 1990களில் கூட்டணி அரசு உருவானபோது, 'பிரதமர் பதவி ஏற்க தயாராக இருக்கிறீர்களா' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில் என்பது குறிப்பிடத்தக்கது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan