Paristamil Navigation Paristamil advert login

சிகிச்சைக்காக பிரான்சுக்கு வந்த குழந்தை விமானத்தில் உயிரிழந்த துயரம்!!

சிகிச்சைக்காக பிரான்சுக்கு வந்த குழந்தை விமானத்தில் உயிரிழந்த துயரம்!!

23 மாசி 2026 திங்கள் 14:21 | பார்வைகள் : 4209


கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, Air France நிறுவனத்தின் நைரோபி–பரிஸ் (Nairobi-Paris) விமானப் பயணத்தின் போது உயிரிழந்தது. சிகிச்சைக்காக பிரான்ஸுக்கு கொண்டு வரப்பட்டிருந்த இந்த குழந்தை, பிப்ரவரி 23 திங்கட்கிழமை காலை, Nairobi இலிருந்து Paris நோக்கி புறப்பட்ட விமானத்தில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டது.

விமான குழு நடைமுறைக்கு ஏற்ப Samu de Paris அவசர சேவையை தொடர்பு கொண்டதுடன், விமானத்தில் இருந்த மருத்துவர்களும் உடனடியாக உதவ முனைந்தனர். இருப்பினும், அவர்களின் முயற்சிகள் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை; விமானம் இன்று காலை சுமார் 6:10 Paris-Charles-de-Gaulle விமான நிலையத்தில் தரையிறங்கியது.