மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி?
23 மாசி 2026 திங்கள் 13:31 | பார்வைகள் : 870
மணிரத்னம் இயக்கி கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் தக்லைப். கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது. அடுத்தபடியாக இளவட்டங்களை வைத்து ஒரு காதல் கதையை இயக்க உள்ளார் மணிரத்னம். அந்த படத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதை மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது. பாக்கெட் நாவல் படத்தை விஜய் சேதுபதியும், கல்கி 2 படத்தை சாய் பல்லவியும் முடித்த பிறகு மணிரத்னம் இயக்கும் இந்த புதிய படத்தில் இணைய இருப்பதாக தெரிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan