விவசாயக்கண்காட்சியில் 15 பேர் கைது!!
23 மாசி 2026 திங்கள் 07:00 | பார்வைகள் : 1995
விவசாயக்கண்காட்சியின் (Paris
Salon de l’agriculture) போது கத்திக்குத்து மற்றும் கலவரத்தின் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பெப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை கண்காட்சியின் போது பார்வையாளர்கள் மற்றும் அதன் ஏற்பாட்டாளர்கள் (கால்நடை பண்ணையாளர்கள், விவசாயிகள்) இடையே மோதல் வெடித்தது. பார்வையாளர்கள் சிலர் கண்காட்சியாளர்களை தாக்கியுள்ளனர். பின்னர் இரு தரப்பும் கட்டிப்புரண்டு சண்டையிட்டிருந்தனர்.
காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் தலையிட்டபோது, அவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றது. ஒரு காவல்துறை மற்றும் ஒரு ஜொந்தாம் வீரர் என இருவர் காயமடைந்தனர்.
15 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டனர். இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தமைக்குரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan