எயார் பிரான்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்! - பெரும் ஆபத்து தவிர்ப்பு!!
22 மாசி 2026 ஞாயிறு 17:33 | பார்வைகள் : 2880
பரிசை நோக்கி புறப்பட்ட எயார் பிரான்ஸ் விமானம் ஒன்று புறப்பட்ட சில நொடிகளிலேயே தரையிறக்கப்பட்டது.
சனிக்கிழமை இரவு Fort-de-France (Martinique) விமானநிலையத்தில் இருந்து எயார் பிரான்ஸ் விமானம் AF895 (போயிங் 777) புறப்பட்டது. பரிசை நோக்கி பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு என அறிவிக்கப்பட்டது.
'இயந்திரத்தில் இருந்து எரியும் மணம் எழுந்ததாக' பல பயணிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
விமானத்தின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, உடனடியாக அது மீள தரையிறக்கப்பட்டு, அவசரமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
விமானக்குழுவுடன் சேர்த்து 469 பேர் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan