இலங்கையில் காணித் தகராறு - ஒருவர் கொலை
22 மாசி 2026 ஞாயிறு 12:42 | பார்வைகள் : 1052
நபர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து, பெண்ணொருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர் மொறவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபராவார்.
காணித் தகராறு வலுப்பெற்றதன் காரணமாகவே நபர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பெண் உயிரிழந்த நபரின் மனைவி எனவும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மொறவக்க வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலையுடன் தொடர்புடைய 49 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan