யாராக இருந்தாலும் அந்த சுதந்திரத்துடன் விளையாட முடியாது - இலங்கை பயிற்சியாளர்
22 மாசி 2026 ஞாயிறு 09:54 | பார்வைகள் : 168
சூப்பர் 8 சுற்றில் விளையாடும்போது, தனியார் லீக்கில் விளையாடுவது போன்ற சுதந்திரத்துடன் விளையாட முடியாது என இலங்கை ஃபீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
பல்லேகேலேவில் இன்று நடைபெற உள்ள சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்தை போட்டியை நடந்து இலங்கை அணி எதிர்கொள்கிறது.
நடப்பு தொடரில் இலங்கை அணி பலமாக இருந்தாலும், நேருக்கு நேர் மோதலில் இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தியிருப்பதால், இப்போட்டியில் கடுமையான நெருக்கடி கொடுக்கும்.
இந்த போட்டி குறித்து இலங்கையின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், "யாராக இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு சூப்பர் 8 ஆட்டத்தை விளையாடும்போது, இருதரப்பு அல்லது தனியார் லீக்கில் விளையாடுவது போன்ற சுதந்திரத்துடன் விளையாடமாட்டீர்கள்.
எனவே இரு அணிகளுக்கும் அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும்.
அழுத்தத்தின் கீழ் விடயங்களை சரியாக செய்யும் அணி, குறைவான தவறுகளை செய்யும் அணியே வெற்றிபெற வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan