Paristamil Navigation Paristamil advert login

இந்தியா - பிரேசில் இடையிலான வர்த்தகம்.. மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்தியா - பிரேசில் இடையிலான வர்த்தகம்..  மோடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

22 மாசி 2026 ஞாயிறு 14:20 | பார்வைகள் : 739


ஐந்து ஆண்டுகளில் இந்திய - பிரேசில் இடையிலான வர்த்தகத்தை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அரிய வகை கனிமங்கள், சுரங்கம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் பிரேசில் அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு, சூப்பர் கம்ப்யூட்டர், செமிகண்டக்டர் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பிரேசிலுடன் இணைந்து செயல்பட முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரேசில் அதிபர் லுலா டா சில்வாவிற்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.