Paristamil Navigation Paristamil advert login

ரொனால்டோ பற்றி மோசமாக பேச பணம் கொடுத்தார்கள் - முன்னாள் காதலி

 ரொனால்டோ பற்றி மோசமாக பேச பணம் கொடுத்தார்கள் - முன்னாள் காதலி

21 மாசி 2026 சனி 09:16 | பார்வைகள் : 157


ரொனால்டோ பற்றி மோசமாக பேச பணம் கொடுத்தார்கள் என அவரது முன்னாள் காதலி ஜெம்மா அட்கின்சன் தெரிவித்துள்ளார்.

போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியனா ரொனால்டோ, கால்பந்து உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

2025 ஆம் ஆண்டில் 260 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2349 கோடி) வருமானம் ஈட்டி, ஆண்டில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

41 வயதான ரொனால்டோ ஜார்ஜினா ரோட்ரிகஸ் என்பவருடன் நீண்ட காலமாக உறவில் உள்ளார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில், ரொனால்டோ குறித்து மோசமாக பேச நிறைய பணம் கொடுத்ததாக அவரது முன்னாள் காதலி ஜெம்மா அட்கின்சன்(Gemma Atkinson) தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், 2007 ஆம் ஆண்டில் ரொனால்டோவை பிரிந்த போது, அவரைப் பற்றி மோசமாக பேச எனக்கு நிறைய பணம் வழங்கினார்கள்.

நான் அதை விரும்பவில்லை. அவரைப் பற்றி எதிர்மறையாக என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டில் ரொனால்டோ மற்றும் ஜெம்மா அட்கின்சன் 4 மாதங்கள் டேட்டிங் செய்தனர்.

41 வயதான முன்னாள் நடிகையான ஜெம்மா அட்கின்சன், கோர்கா மார்க்வெஸ் என்ற ஸ்பானிஷ் நடன கலைஞருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்