Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பின்ஸ் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

பிலிப்பின்ஸ் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

21 மாசி 2026 சனி 09:11 | பார்வைகள் : 430


தென்கிழக்கு பிலிப்பின்ஸில் பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மாட்டி நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில், பெரிய பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில் அங்கிருந்த ஒரு வீடு முழுமையாக புதைந்தது. அந்த வீட்டில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.

இதேபோல், டாவோ டீ ஓரோ மாகாணத்தில் உள்ள மொன்காயோ நகரிலும் நிலச்சரிவால் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேர் உயிரிழந்தனர்.

தொடர் மழையினால் இந்தப் பகுதியில் சுமார் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக 3,200-க்கும் மேற்பட்டோர் அரச நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்