Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

 ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

21 மாசி 2026 சனி 08:54 | பார்வைகள் : 434


ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 5.8 ஆக பதிவாகி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 130 கிமீ தொலைவில் உள்ளது நங்கார்ஹர் மாகாணம். இங்கு இன்று 5.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் அதிர்வுகள் பாமியான், வர்தாக் மாகாணங்களில் உணரப்பட்டது. வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள், பொருள்சேதம் ஏற்பட்டதா என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை.

2025ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களில் ரிக்டரில் 6 புள்ளிகளாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2200க்கும் அதிகமானோர் பலியாகினர்.

அதன் பின்னர் சில வாரங்கள் கழித்து ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணங்களில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 27 பேர் உயிரிழந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்