Paristamil Navigation Paristamil advert login

பரிஸில் ஒரே நேரத்தில் பல வெடிகுண்டு அச்சுறுத்தல்கள்!!

பரிஸில் ஒரே நேரத்தில் பல வெடிகுண்டு அச்சுறுத்தல்கள்!!

20 மாசி 2026 வெள்ளி 22:06 | பார்வைகள் : 2612


இன்று மாலை சுமார் 6 மணியளவில், பரிஸின் பல இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து Sciences Po Paris மற்றும் Tour Montparnasse ஆகிய இடங்கள் பாதுகாப்பு சோதனைக்காக உடனடியாக மூடப்பட்டது. 

அதிகாரிகள் அச்சுறுத்தல் உண்மையா என்பதை உறுதிப்படுத்த ‘பாதுகாப்பு ஆய்வு’ மேற்கொண்டனர். அதிகாரிகளின் தகவலின்படி, அங்கு எந்தவித சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்த மொன்பர்னாஸ் கோபுரத்தில் இருந்த தொழிலாளர்களும் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர். நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்