சீனாவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தி - 12 பேர் பலி
20 மாசி 2026 வெள்ளி 15:15 | பார்வைகள் : 345
சீனாவில், சந்திர புத்தாண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசு வெடிக்கப்பட்டதில் பாரிய அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில், சந்திர புத்தாண்டு சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நாடு முழுதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
சீன ஜோதிடத்தின்படி இது 'குதிரை ஆண்டு' தொடக்கத்தைக் குறிக்கின்றது.
இந்தக் கொண்டாட்டத்தின்போது தீய சக்திகளை விரட்டப் பட்டாசுகள் வெடிப்பது மரபாக கருதப்படுகின்றது.
இந்நிலையில் தீய சக்திகளை விரட்டும் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வெடிவிபத்தால் 12 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan