Paristamil Navigation Paristamil advert login

நாளை வெளியாகும் ரஜினி கமல் பட அறிவிப்பு!

நாளை வெளியாகும்  ரஜினி  கமல்  பட  அறிவிப்பு!

20 மாசி 2026 வெள்ளி 12:34 | பார்வைகள் : 1859


நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அதன்பின் இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்க தொடங்கி இன்று உச்ச நட்சத்திரங்களாக உள்ளனர். பல ஆண்டுகளுக்கு பின் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க முடிவாகி சில மாதங்களுக்கு முன் அதுபற்றிய அறிவிப்பு வந்தது. இருப்பினும் இருவருக்கான கதை பொருத்தக்கூடிய இயக்குனரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இப்போது அதற்கான விடையாக இவர்களின் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க போகிறார். இவர் தற்போது ரஜினியின் ஜெயிலர் 2 படத்தையும் இயக்கி வருகிறார். ரஜினி, கமல் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதுதொடர்பாக நேற்று முதல் சிறு சிறு அப்டேட்களை இந்நிறுவனம் அறிவித்து வருகிறது.

இந்நிலையில் நாளை நண்பகல் 12 : 07 மணியளவில் படம் பற்றிய அறிவிப்பை வீடியோ மூலம் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் இந்த அறிவிப்பு வீடியோவுக்கான படப்பிடிப்பு நடந்துள்ளது. ரெட்ரோ டைப் ஸ்டைலில் இப்படம் இருக்கும் என தெரிகிறது. அதுதொடர்பான குறியீடுகள் போஸ்டரில் வெளிப்படுகின்றன.