பணி நியமனத்தில் முறைகேடு; அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
20 மாசி 2026 வெள்ளி 14:32 | பார்வைகள் : 1532
பணி நியமன முறைகேடு வழக்கில், தமிழக அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் நடந்துள்ளதாக , அமலாக்கத்துறை தமிழக போலீஸ் டிஜிபிக்கு அடுத்தடுத்து கடிதங்களை அனுப்பியது . வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணங்கள் , டிஜிட்டல் கருவிகளில் பதிவாகி இருந்த தகவல்கள் அடிப்படையில் இந்த புகார் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன
அமலாக்கத்துறை அனுப்பிய புகார் கடிதங்களின் அடிப்படையில் , அமைச்சர் நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடங்கியுள்ளனர். இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனக்கூறி அதிமுக தரப்பில் ராஜ்யசபா எம்பி இன்பதுரை சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 20) தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை கடிதம் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ''அமலாக்கத்துறை கடிதம் அடிப்படையில் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
* அமலாக்கத்துறை ஆதாரங்களில் முகாந்திரங்கள் உள்ளன. புகார் அளித்தும் தாமதமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையை உடனே துவங்க வேண்டும் .
* சுதந்திரமாக லஞ்ச ஒழிப்புத்துறை உடனே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் கிளம்பியுள்ள இந்த விவகாரம், திமுகவுக்கும் அமைச்சர் நேருவுக்கும் பெரும் தலைவலியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan