Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கில் அமெரிக்கா தாக்குதலை மேற்கொள்ளுமா...? அதிகரிக்கும் பதற்றம்

 மத்திய கிழக்கில் அமெரிக்கா தாக்குதலை மேற்கொள்ளுமா...?  அதிகரிக்கும் பதற்றம்

20 மாசி 2026 வெள்ளி 06:26 | பார்வைகள் : 485


ஈரான் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஓமன் மத்யஸ்தத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டி வருகிறார்.

ஈரானை நோக்கி அமெரிக்க கடற்படை கப்பல் பிரிவு அனுப்பப்பட்டுள்ளது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து ஓமன் கடலில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன.

எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல் மற்றும் ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கைகளை தடுத்தல் ஆகியவை இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே தாக்குதல்களை எதிர்கொள்ள, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்தி வருகிறது. தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஈரான் நவீனப்படுத்தியுள்ளது.

பார்க்கின் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஜூலை 2025 முதல் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

கூடுதலாக இரண்டு இடங்களில் புதிய வான் பாதுகாப்புப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மொத்தத்தில் ஈரான் தனது அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்