AI மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சீன பல்கலைக்கழகம்
19 மாசி 2026 வியாழன் 14:35 | பார்வைகள் : 341
சீன ரோபோ நாயை தங்களுடைய தயாரிப்பு போல் காட்சிப்படுத்திய பல்கலைக்கழகம் AI மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் பிப்ரவரி 16 - 20 வரை நடைபெற உள்ள AI Impact Summit மாநாட்டை இந்திய பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இதில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும், கூகுள் சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சிஇஓ சாம் அல்ட்மேன் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டில், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்த கண்காட்சியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கோடியாஸ் பல்கலைக்கழகம் ரோபோ நாய் ஒன்றை காட்சிப்படுத்தியது. இதற்கு ஓரியன் என பெயரிட்டுள்ளது.
இந்த ரோபோ நாய் வைரலான நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அந்த ரோபோ நாயின் புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்தார்.
பலரும், அந்த ரோபோ நாய் சீனாவின் ரோபோடிக்ஸ் நிறுவனமான யூனிட்ரீயின் (Unitree) யூனிட்ரீ கோ2 ஆகும். அதனை வாங்கி, தங்களுடைய தயாரிப்பு போல் காட்டியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் விமர்சித்தனர்.
இதனையடுத்து, இது எங்களின் தயாரிப்பு என நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை என மாணவர்களுக்கான கற்றல் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனவும் பல்கலைகழகம் விளக்கமளித்துள்ளது.
இந்த சர்ச்சைக்கு இடையே கோடியாஸ் பல்கலைக்கழகத்தை கண்காட்சி அரங்கில் இருந்து அரசு வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரோபோ நாயின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan