Paristamil Navigation Paristamil advert login

கூடுதல் சீட்டுக்காக கூட்டணி மாறும் அவசியம் இல்லை: திருமாவளவன்

கூடுதல் சீட்டுக்காக கூட்டணி மாறும் அவசியம் இல்லை: திருமாவளவன்

19 மாசி 2026 வியாழன் 11:32 | பார்வைகள் : 182


காங்கிரஸ் கட்சி, தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறது; எங்கள் கூட்டணி கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும், என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருச்சியில் அவர் அளித்த பேட்டி:

மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு என்பது, ஒட்டுமொத்த இந்திய மக்களின் கோரிக்கை. தமிழகத்தில் படிப்படியாக மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து, அடுத்தடுத்து மூட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

அது குறித்த நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை தருகிறது. எனவே, மது ஒழிப்பு குறித்து, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்படுவது இயல்புதான். கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர், ஆட்சியில் பங்கு கேட்கின்றனர்.

ஆட்சியில் பங்கு கேட்பதால், ஒரு கூட்டணி உடைந்து விடாது. கூட்டணியில் இருப்பதால், உரிமையோடு பங்கு கேட்கின்றனர். காலங்காலமாக வெற்றிக்காக உழைத்திருக்கிறோம் என்று கூறி, அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை.

தமிழக அரசியலுக்கு அது பொருந்தி வராது' என முதல்வர் ஸ்டாலின் சொன்னால், பேச்சு நடத்தினால் அது முடிவாகும். காங்கிரஸ் நிச்சயம் தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கும்.

இந்த கூட்டணியை உருவாக்கிய எங்களுக்கு, அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது.

எனவே, வேறு அணியில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. இந்த கூட்டணியில் நீடிப்பதோடு, எங்களுக்கான உரிமையை கேட்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்