12 லட்சம் வங்கி கணக்குகளின் தரவுகள் கசிவு: போலியான தானியங்கி முறையில் பணம் வெட்டும் அபாயம்!!
18 மாசி 2026 புதன் 22:01 | பார்வைகள் : 2088
நாடு முழுவதும் 12 லட்சம் வங்கி கணக்குகளின் தனிப்பட்ட தரவுகள் சட்டவிரோதமாக அணுகப்பட்டுள்ளன. அமைச்சகங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்தின் போது ஒரு அரசு அதிகாரியின் அடையாள விவரங்கள் திருடப்பட்டு, தேசிய வங்கி கணக்கு கோப்பு (FICOBA) பகுதியளவில் அணுகப்பட்டது என்று Ministère des Finances தெரிவித்துள்ளது.
இந்த தரவு கசிவில் IBAN, கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி மற்றும் சில சமயங்களில் வரி அடையாள எண் உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. சம்பவம் கண்டறியப்பட்டதும் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட அறிவிப்புகள் அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Fédération bancaire française (FBF) விளக்குவதாவது, இந்த தகவல்கள் மட்டும் இருந்தால் நேரடி பண பரிமாற்றம் அல்லது வங்கி அட்டையின் மூலமும் பரிமாற்றம் செய்ய முடியாது. இருப்பினும், மோசடிக்காரர்கள் IBAN எண்ணைப் பயன்படுத்தி போலியான தானியங்கி பணவெட்டுகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மோசடிகளைத் தவிர்க்க, ஆன்லைன் வங்கி கணக்கில் அனுமதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பணவெட்டு பட்டியலை முறையாகச் சரிபார்க்கவும், கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகைகளை கவனமாக கண்காணிக்கவும் வேண்டும் என Observatoire de la Sécurité des Moyens de Paiement பரிந்துரைக்கிறது. சந்தேகமான பரிவர்த்தனைகள் இருந்தால் உடனடியாக வங்கியை தொடர்புகொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan