இலங்கை ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது
18 மாசி 2026 புதன் 17:27 | பார்வைகள் : 1958
மத்தள அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தைகள் பயன்படுத்தி, அதனை காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படும் ஐந்து பேரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (17) இடம்பெற்றது. கதிர்காமம் யாத்திரையிலிருந்து திரும்பிய தனியார் பேருந்தொன்றுக்கு, சீட் பெல்ட் இல்லாத காரணத்தால் அதிவேக நெடுஞ்சாலையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, பேருந்து பயணிகள் மற்றும் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மோதலின்போது, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் பெயரை குறிப்பிட்டு சிலர் தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டு பின்னர் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.
நாட்டின் ஜனாதிபதியை பகிரங்கமாக அவதூறாகப் பேசியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவே குறித்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் தலைமையகத்திற்கும், மற்றைய இரு அதிகாரிகள் கொட்டாவ மற்றும் கடவத்த பொலிஸ் நிலையங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan