சூர்யாவுடன் இணையும் டிராகன் பட இயக்குனர்!
18 மாசி 2026 புதன் 13:04 | பார்வைகள் : 167
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் அஸ்வத் மாரிமுத்து. இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனக நடிக்க ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.. அதன்பின் மூன்று வருடங்களுக்கு பின் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய திரைப்படம்தான் டிராகன்.
ஏற்கனவே பிரதீப் ரங்கநாதருக்கு லவ் டுடே ஹிட் அடித்த நிலையில் டிராகன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் மிஷ்கின், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் 100 கோடி வசூலை பெற்றதாக சொல்லப்பட்டது..
இந்த படத்திற்கு பின் சிம்புவின் 51 வது படத்தை அஸ்வத் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இந்நிலையில்தான், சூர்யாவை வைத்து அஸ்வத் ஒரு படத்தை இயக்கவுள்ளது தெரிய வந்திருக்கிறது. அதாவது ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகியபோது ரஜினி சில இயக்குனர்களிடம் கதை கேட்டார். அதில் அஸ்வத் மாரிமுத்துவும் ஒருவர்..
ஆனால் ரஜினி படத்தை இயக்குவது சிபிச் சக்ரவர்த்தி என்பது உறுதியாகிவிட்டது.
எனவே அந்த கதையைத்தான் சூர்யாவிடம் சொல்லி அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளாராம். சிம்பு படத்தை முடித்துவிட்டு சூர்யா படத்தை அசோகர் மாரிமுத்து இயக்கவிருக்கிறார்..






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan