படிப்பை பாதியில் நிறுத்தும் இளைஞர்கள் வேலையின்மையால் அதிகம் பாதிப்பு!!
17 மாசி 2026 செவ்வாய் 21:20 | பார்வைகள் : 522
Institut national de la statistique et des études économiques (Insee) வெளியிட்ட ஆய்வின் படி, பிரான்சில் 2024 ஆம் ஆண்டில் 15 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 20% பேர் தாங்கள் தொடங்கிய கல்வியை பாதியில் கைவிட்டுள்ளனர்; இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரியான நிலையை விட 14 சதவீதம் விட அதிகமாகும்.
படிப்பை பாதியில் நிறுத்துவது பெரும்பாலும் தேர்வு தோல்வி அல்லது பட்டப்படிப்பு மாற்றக் கட்டங்களில் நடைபெறுகிறது. கல்வியை நிரந்தரமாக கைவிட்ட இளைஞர்களில் 23% பேர் வேலை இழப்பு நிலைக்கு உள்ளாகியுள்ளனர், ஆனால் படிப்பை முடித்தவர்களில் இது 15% மட்டுமே. மேலும், கல்வியை கைவிட்ட இளைஞர்களில் 20% பேர் தற்காலிக வேலை ஒப்பந்தங்களில் உள்ளனர், இதேசமயம் படிப்பை கைவிடாதவர்களில் இது 14% ஆகும்.
பொருளாதார முன்னேற்றம் அடைந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கல்வியை கைவிட்டாலும் பெரும்பாலும் மறுபயிற்சி மேற்கொள்கிறார்கள்; ஆனால் தொழிலாளர் அல்லது வேலை இல்லா குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் கல்வியை முற்றிலும் நிறுத்துகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan