பிரான்சில் வெள்ளைச் சுனாமி! - உள்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!!
17 மாசி 2026 செவ்வாய் 16:20 | பார்வைகள் : 3234
பிரான்சில் கடந்த 2025 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் அளவை 'வெள்ளைச் சுனாமி' என பதிவு செய்துள்ளார் உள்துறை அமைச்சர்.
பிரான்சில் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.1 மில்லியனாக உயர்ந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் அதிகரித்த நிலையில், நாட்டுக்குள் கொக்கைன் கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. அதேவேளை, கொக்கைனின் விலையும் குறைவடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஒரு கிராம் கொக்கைன் €66 யூரோக்களாக இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் அது €58 யூரோக்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதுவே சென்ற 2025 ஆம் ஆண்டில் சில பகுதிகளில் €50 யூரோக்கள் வரை வீழ்ச்சிகண்டது.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு 4,000 தொன் கொக்கைன் போதைப்பொருள் உற்பத்தியாவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்சில் சென்ற 2025 ஆம் ஆண்டு 81 தொன் கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த எண்ணிக்கை முந்தைய எந்த ஆண்டுகளிலும் கைப்பற்றப்படாத எண்ணிக்கையாகும். அதனாலேயே இதனை 'வெள்ளைச் சுனாமி' என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர், பிரான்சில் ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் எண்ணிக்கை 54 தொன், அது 2024 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டிருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan