Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் எந்த தொடர்பும் இல்லை - டிரம்ப்!

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் எந்த தொடர்பும் இல்லை -  டிரம்ப்!

17 மாசி 2026 செவ்வாய் 11:42 | பார்வைகள் : 257


அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை(16) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சிறுமிகளை கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜெஃப்ரி எப்ஸ்டீநுக்கு வந்த மற்றும் அனுப்பிய அனுப்பிய மின்னஞ்சல்கள், விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அடங்கிய 35 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகளில் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை எப்ஸ்டீன் முன்வைத்துள்ளதுடன் , பாதிக்கப்பட்டவர்கள் என சிலர் அளித்த வாக்குமூலமும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றிருந்தன.

இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டன.

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசுகையில், எப்ஸ்டீன் விவகாரத்தின் நான் மறைக்க எதுவும் இல்லை. நான் விடுவிக்கப்பட்டேன்.

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எப்ஸ்டீன் வழக்கில் நான் முற்றிலும் விடுவிக்கப்பட்டேன்.

சிலருடன் சேர்ந்து நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ஜெஃப்ரி எப்ஸ்டீன் போராடினார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்